அரசின் சதித்திட்டத்துக்குத் துணைபோகும் தேர்தல் ஆணையாளர் – அநுர விசனம்!
6 view
‘தோல்விப் பயத்தில்தான் ரணில் – ராஜபக்ச அரச தரப்பினர் தேர்தலுக்குச் செல்வதற்குப் பயப்படுகின்றார்கள். அதனால் தேர்தலை ஒத்திவைக்க அவர்கள் திட்டம் தீட்டுகின்றனர். அரசின் இந்தச் சதித்திட்டத்துக்குத் தேர்தல்கள் ஆணையாளர் துணைபோகின்றார் என ஜே.வி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் கடந்த ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வந்துவிட்டது. அவர்கள் நினைத்தால் இன்றே வேட்புமனுக்களைக் கோர முடியும்.எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி என்பது இறுதித் திகதி. அவர்கள் ஏன் இறுதித் திகதி வரை காத்திருக்க வேண்டும்? அதுவரை அவர்கள் காத்திருப்பது அரசின் நிலைப்பாட்டை அறிவதற்காக தேர்தலுக்குச் செல்வதற்கு அரசுக்கு விருப்பம் இல்லை’என்றார். ‘அரசு தேர்தலுக்கு அஞ்சுவதற்கான காரணம்?’ என்ற கேள்விக்கு அநுரகுமார பதிலளிக்கும் போது, ‘இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தேர்தலை எப்படி…
The post அரசின் சதித்திட்டத்துக்குத் துணைபோகும் தேர்தல் ஆணையாளர் – அநுர விசனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசின் சதித்திட்டத்துக்குத் துணைபோகும் தேர்தல் ஆணையாளர் – அநுர விசனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
