இலங்கை பாதுகாப்புச் செயலரை சந்தித்த இந்திய முக்கியஸ்தர்
6 view
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய கடற்படைத் தளபதி (CNS) அட்மிரல் ஆர். ஹரி குமார் கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராணுவ இராஜதந்திரம் தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். சந்திப்பைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதியும் பாதுகாப்புச் செயலாளரும் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டனர், அதன் பின்னர், வருகை தந்த கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சுக்கான CNS இன் விஜயத்தைக் குறிக்கும் வகையில் பார்வையாளர்கள் புத்தகத்தில் தனது கையொப்பத்தை இட்டார். குறித்த சந்திப்பில் இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்துகொண்டார்.
The post இலங்கை பாதுகாப்புச் செயலரை சந்தித்த இந்திய முக்கியஸ்தர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை பாதுகாப்புச் செயலரை சந்தித்த இந்திய முக்கியஸ்தர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
