13 பிளஸ்ஸிற்கு பச்சைக்கொடி காட்டிய பஸில்!
6 view
” 13 பிளஸ் யோசனையால் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து ஜனாதிபதி தமிழ்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார் எனக் கூறப்படுகின்றது, ஆனால் ஒற்றையாட்சியையே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்கின்றது. எனவே, எல்லைமீறிய அதிகாரப் பகிர்வை எதிர்ப்பீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பஸில் ராஜபக்ச இவ்வாறு கூறினார். ” 13 பிளஸ் என்ற யோசனையை மஹிந்த ராஜபக்சவே முதன் முதலில் முன்வைத்தார். அதன்மூலம் நாட்டின் ஒற்றையாட்சி உறுதிப்படுத்தப்பட்டது. சொல்லளவில் இருந்த ஒற்றையாட்சியை மஹிந்த ராஜபக்சவே நிஜமாக்கினார். நாட்டின் தேசியக் கொடியை எங்கு வேண்டுமானாலும் ஏற்றக்கூடிய சூழ்நிலையை உருவாக்கினார். ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள்ளேயே நடவடிக்கை இடம்பெறும்.” – எனவும் பஸில் ராஜபக்ச குறிப்பிட்டார்.
The post 13 பிளஸ்ஸிற்கு பச்சைக்கொடி காட்டிய பஸில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 13 பிளஸ்ஸிற்கு பச்சைக்கொடி காட்டிய பஸில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
