பேராதனை பல்கலை முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட விவகாரம் – இன்றும் பலர் கைது
13 view
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் பேராசிரியருமான அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகனைத் தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் பல்கலைக்கழக மாணவர்கள் எனக்கூறப்படும் இனந்தெரியாத குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேராசிரியர், பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்தபோதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இந்த நிலையில் தொடர்ச்சியாக பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post பேராதனை பல்கலை முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட விவகாரம் – இன்றும் பலர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேராதனை பல்கலை முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட விவகாரம் – இன்றும் பலர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
