கொழும்பு பாஸ்போர்ட் அலுவலகத்தில் பிறந்த குழந்தை!
14 view
பத்தரமுல்ல குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக வரிசையில் நின்றிருந்த போது பிரசவ அறிகுறி காரணமாக வைத்தியசாலையில் பிறந்த குழந்தையும் தாயும் இன்று (13) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குறித்த தாய் ஜூலை 7ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இன்று வரை பொரளை காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். தனது கணவரின் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு திணைக்களத்திற்கு முன்னால் சென்ற போது, அங்கிருந்த இராணுவ அதிகாரிகளின் தலையீட்டில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இந்த சம்பவத்தை எதிர்கொண்டார். தாயும் சேயும் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதையடுத்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
The post கொழும்பு பாஸ்போர்ட் அலுவலகத்தில் பிறந்த குழந்தை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு பாஸ்போர்ட் அலுவலகத்தில் பிறந்த குழந்தை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
