வவுனியாவில் பாரதி முன்பள்ளி மாணவர்களின் கலைவிழா!

6 view
வவுனியா பாரதி முன்பள்ளி மாணவர்களின் பாரதி கலைவிழா நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் ஜெயராஜா சந்திரா தலைமையில் இடம்பெற்றது. மங்கவிளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானதுடன் வரவேற்புரை, தலைமையுரை, அதிதிகள் உரையுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் நாகலிங்கம் கமலதாசன் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய ஆரம்பப்பிரிவு பிரதி அதிபர் தர்மலிங்கம் ஸ்ரீகாந்தன் , வவுனியா தெற்கு ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் செ.விஜயகாந்தன் , வவுனியா தெற்கு வலயக்கல்வி ஆசிரியர் வளவாளர் எஸ்.மனோகரன் , முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் வீரவாகு பரஞ்சோதி அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வைரவப்புளியங்குளம் கிராம சேவையாளர் க.விஜயகுமார் , மாவட்ட செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெ.ஜெயகெனடி அவர்களும் விருந்தினர்களாக பொதுமக்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். —
The post வவுனியாவில் பாரதி முன்பள்ளி மாணவர்களின் கலைவிழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース