யாழில் சட்டவிரோத சுண்ணாம்புக்கல் அகழ்வு
6 view
வயாவிளான் குட்டியப்புலம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் கீழ் இயங்கும் புலனாய்வு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது உழவு இயந்திர சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரங்களும் சுண்ணாம்புக் கற்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
The post யாழில் சட்டவிரோத சுண்ணாம்புக்கல் அகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் சட்டவிரோத சுண்ணாம்புக்கல் அகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
