யாழில் சட்டவிரோத கடல் அட்டை பண்ணையை அகற்றுவோம் – குருநகர் மீனவர்கள் தெரிவிப்பு

11 view
கடலட்டைப் பண்ணைகள் சரியான முறையில், உரிய நியதிகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள குருநகர் கடலட்டைப் பண்ணையாளர்கள், சட்டவிரோத பண்ணை இருந்தால் காட்டுங்கள் அதனை அகற்றுவதற்கு  தயாராக இருக்கிறோம் என  தெரிவித்தனர். இன்று செவ்வாய்க்கிழமை குறித்த பகுதியில் உள்ள கடற் பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்களை அழைத்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர்களை இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.  அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:  கடற்றொழிலாளர்களின் வாழ்வில் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற பொருளாதார மீட்சியை குழப்புகின்ற வகையில் கடலட்டைப் பண்ணை தொடர்பாக வெளியாகி வருகின்ற கருத்துக்கள் எமக்கு வேதனை தருகிறது. கடலட்டைப் பண்ணை அமைப்பு தொடர்பாக வெளியாகி வருகின்ற கருத்துக்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் கடலட்டைப் பண்ணையாளர்கள் ஆகிய நாங்கள்  நேரடியாகவே கலந்துரையாடலுக்கு அழைத்தோம். கடலட்டைப் பண்ணைகள் அனைத்து நடைமுறையகளையும் பின்பற்றியே அமைக்கப்பட்டு வருகின்றது. எனினும் சில கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திர ஆவணங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அதற்காக அவற்றை சட்ட விரோத பண்ணைகளாக கருத முடியாது.…
The post யாழில் சட்டவிரோத கடல் அட்டை பண்ணையை அகற்றுவோம் – குருநகர் மீனவர்கள் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース