வவுனியாவில் தமிழ் குடும்பமொன்றின் வாழ்வில் ஒளியேற்றிய இராணுவத்தினர்!
9 view
வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவில் மூன்று பிள்ளைகளுடன் வறுமையில் வாழும் குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் வீடு கையளிக்கும் நிகழ்வு நேற்று (12) இடம்பெற்றது. வீடற்ற அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், வடமாகாணத்தில் பொருளாதார சிரமத்துடன் வாழும் வறிய குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் மற்றுமொரு பணியை நிறைவுசெய்து வறிய நிலையில் வாழும் குடும்பத்திற்கு வீடு கையளிக்கப்பட்டது. இந்த நிதியுதவிக்காக சுமார் 35 இலட்சம் ரூபா தனியார் நன்கொடைகள் மூலமும், இராணுவம் முழு உழைப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், புதிய வீட்டின் பெறுமதி 5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும். வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சி.டி. ரணசிங்க மற்றும் ஏனைய அதிகாரிகளின் பங்கேற்புடன் வவுனியா பிரதேச செயலக அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post வவுனியாவில் தமிழ் குடும்பமொன்றின் வாழ்வில் ஒளியேற்றிய இராணுவத்தினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் தமிழ் குடும்பமொன்றின் வாழ்வில் ஒளியேற்றிய இராணுவத்தினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
