வேலுகுமார் மீதான இடைக்காலத் தடையை உடனடியாக மீளப்பெற வேண்டும்! – விடுக்கப்பட்ட கோரிக்கை
8 view
“தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்பது கண்டி மாவட்ட தமிழ் மக்களின் உயிர்நாடியாகும். அதற்குத் துளியளவும் களங்கம் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். அது எமது உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள ‘இடைக்காலத் தடை’யை தமிழ் முற்போக்குக் கூட்டணி உடனடியாக மீளப்பெற வேண்டும்” – என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ‘ஒற்றுமை’யே பலம்பொருந்திய ஆயுதம். தமிழ் பேசும் மக்களின் இருப்புக்கான அடித்தளம். அதனை மேலும் பலமாக்கவே நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார். அவர் ‘நடுநிலை’ வகித்த தீர்மானம்கூட, கூட்டணியின் நன்மை கருதியது. எனவே, தடம் புரண்ட – மாறிய இடத்தை சீர்செய்துகொண்டு முன்னோக்கிப் பயணித்தால் மட்டுமே இலக்கை நோக்கி நகர முடியும். அதனைவிடுத்து அவருக்கு எதிராக ‘சேறுபூசும்’ பரப்புரைகளை முன்னெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது; கண்டிக்கத்தக்கது. அலசி ஆராயாமல், அரசியல்…
The post வேலுகுமார் மீதான இடைக்காலத் தடையை உடனடியாக மீளப்பெற வேண்டும்! – விடுக்கப்பட்ட கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வேலுகுமார் மீதான இடைக்காலத் தடையை உடனடியாக மீளப்பெற வேண்டும்! – விடுக்கப்பட்ட கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
