மனோவின் கூட்டணிக்குள் குழப்பநிலை- இளைஞர் அணி எடுத்த அதிரடி முடிவு!
6 view
“கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்பது காலத்தின் கட்டாயம். அந்த பிரதிநிதித்துவத்துக்கு எதிராக அரங்கேறும் சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அரசியல் ரீதியில் மீண்டும் அநாதைகளாவதற்குக் கண்டி மாவட்ட தமிழர்கள் தயாராக இல்லை. எனவே, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மீதான இடைக்காலத் தடையை மீளப்பெறும் – நீக்கும் முடிவை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைப்பீடம் உடனடியாக எடுக்க வேண்டும்.” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட இளைஞர் அணியின் பொதுச்செயலாளர் ஜீவன் சரண் கோரிக்கை விடுத்துள்ளார். கண்டியில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அவர் மேலும் கூறுகையில், “தாய் கருத்தரிப்பதற்கு முன்னரே குழந்தைக்குப் பெயர் வைத்து விழா எடுத்துவிட முடியுமா? அவ்வாறு செயற்படும் சிலரும் இருக்கவே செய்கின்றனர். இவ்வாறுதான் பாதீட்டு வாக்கெடுப்பில் ‘நடுநிலை’ என்ற எமது கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் நிலைப்பாட்டை ‘அரசுக்கு ஆதரவானது’ என…
The post மனோவின் கூட்டணிக்குள் குழப்பநிலை- இளைஞர் அணி எடுத்த அதிரடி முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனோவின் கூட்டணிக்குள் குழப்பநிலை- இளைஞர் அணி எடுத்த அதிரடி முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
