ரணில் அரசுக்கு மீண்டும் தலையிடி – புதிய குழுவை உருவாகிய காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்
20 view
காலிமுகத்திடலில் அரசாங்கதுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்திருந்த “அரகலய” ஏற்பாட்டாளர்கள், உள்ளூராட்சித் தேர்தலுக்கு இளம் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக கலந்துரையாடல் குழுவொன்றை உருவாக்கியுள்ளனர். “அரகலய எக்ஸ்கோர்” என்ற இந்த அமைப்பு நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது, நாட்டில் பொதுவெளியில் பதவியை நாடுகின்ற திறமை உள்ள இளைஞர் தலைவர்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரகலயா எக்ஸ்கோரின் ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இது ஒரு அரசியல் கட்சி அல்ல என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் இது சாத்தியமான வேட்பாளர்களை வெளியே கொண்டு வருவதற்கான ஒரு இயக்கம் என்று அரகலயா எக்ஸ்கோரின் ஒருங்கிணைப்பாளர் நிபுன் தாரக தெரிவித்துள்ளார்.மேலும் உள்ளூராட்சி தேர்தலுக்குள் எங்கள் பிரதிநிதிகளை தயார்படுத்தப்போவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post ரணில் அரசுக்கு மீண்டும் தலையிடி – புதிய குழுவை உருவாகிய காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் அரசுக்கு மீண்டும் தலையிடி – புதிய குழுவை உருவாகிய காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
