அரசு எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க தயாராக இல்லை! திடீரென பல்டியடித்த பசில்
6 view
தற்போதைய அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொறுப்பேற்க தயாராக இல்லை என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தற்போதைய அரசாங்கத்திற்கு தான் ஆதரவு தெரிவித்தாலும் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார். இன்னும் சில நாட்கள் கவலைப்படாமல் இருந்தால், நம் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு தெளிவாக உள்ளது. இப்போது போராட்டம் இல்லை. என்ன வித்தியாசம்? 69 இலட்சம் வாக்குகளோடு ஆட்சிக்கு வந்தவரை அப்புறப்படுத்துமாறு மக்கள் கேட்டனர். அவர் போய்விட்டார் . இப்போது என்ன நடந்தது? இப்போது உணவு இருக்கிறதா? மக்களின் கஷ்டங்கள் தீர்ந்து விட்டதா? அதை ஏன் இப்போது ஊடகங்களில் காட்டவில்லை?. மக்களுக்காக தியாகம் செய்த கோட்டாபய இன்று துயரத்தில் இருக்கிறார் என அவர் தெரிவித்துளளார்.
The post அரசு எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க தயாராக இல்லை! திடீரென பல்டியடித்த பசில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசு எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க தயாராக இல்லை! திடீரென பல்டியடித்த பசில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
