அம்பாறை, மன்னார் நகர சபைகளை தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி!
6 view
தற்போதுள்ள உள்கட்டமைப்பு, அலுவலக வசதிகள் மற்றும் மனித வளங்களைப் பயன்படுத்தி கூடுதல் ஒதுக்கீட்டைச் செலவிடாமல் பல மாவட்டங்களில் தற்போதுள்ள தலைநகரங்கள் மற்றும் நகராட்சிகளை மாநகர சபைகளாக நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, அம்பாறை மற்றும் மன்னார் மாவட்டங்களில் பிரதான நகரங்களான அம்பாறை மற்றும் மன்னார் ஆகிய இரண்டு நகரங்களை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை கவனத்தில் கொண்டு இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post அம்பாறை, மன்னார் நகர சபைகளை தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அம்பாறை, மன்னார் நகர சபைகளை தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
