புதிய ஆண்டில் நாடாளுமன்றம் கூடும் தினத்தில் மாற்றம்
16 view
புதிய ஆண்டில் நாடாளுமன்றம் கூடும் தினத்தில் மாற்றத்தை செய்ய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி முதல் முதலில் கூடவுள்ளது. நாடாளுமன்றத்தின் புதிய ஆண்டுக்கான கூட்டத்தை ஜனவரி மாதம் 17 ஆம் திகதி நடத்துவது என இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்துடன் 2022 ஆம் ஆண்டின் இறுதி நாடாளுமன்ற அமர்வு நாளைய தினம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மொழி மூலமான கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான தெரிவுக்குழு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியது. இதன் பின்னர் 23 நாட்களில் மீண்டும் நாடாளுமன்றம் கூடும்.
The post புதிய ஆண்டில் நாடாளுமன்றம் கூடும் தினத்தில் மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய ஆண்டில் நாடாளுமன்றம் கூடும் தினத்தில் மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
