முன்னாள் உப வேந்தர் மீது தாக்குதல் – 6 பல்கலை மாணவர்கள் அதிரடியாக கைது!
14 view
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் உள்ளிட்டோரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த மாணவர்கள் காவல்நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் 23 மற்றும் 25 வயதுடைய நிட்டம்புவ, கிரிதலை, மாத்தளை மற்றும் ஹேன்கமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். அத்துடன், சம்பவம் தொடர்பில் மேலும் 6 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளும் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று, 12 பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் தொடர்பாக அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களின் மாணவர் தகுதியும் ரத்து செய்யப்பட்டது.
The post முன்னாள் உப வேந்தர் மீது தாக்குதல் – 6 பல்கலை மாணவர்கள் அதிரடியாக கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முன்னாள் உப வேந்தர் மீது தாக்குதல் – 6 பல்கலை மாணவர்கள் அதிரடியாக கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
