ஈரானில் மற்றுமொருவருக்கு விதிக்கப்பட்டது தூக்கு தண்டனை!
16 view
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்துடன் தொடர்புடைய இரண்டாவது நபருக்கு ஈரான் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த செப்டம்பர் மாதம் 13ம் திகதி குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது பெண்ணை ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று தெரிவித்து அந்த நாட்டின் அறநெறி காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தாக்கியதில், மாஷா அமினி கோமா நிலைக்கு தள்ளப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் மாஷா சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் 16ம் திகதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரானில் உள்ள பெண்கள், ஹிஜாப் அணிவதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தில் களமிறங்கினர். மாதக்கணக்கில் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தின் முதல் வெற்றியாக சமீபத்தில் ஈரான் அரசு பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் சரியாக அணிவதையும், இஸ்லாமிய சட்டங்களை சரியாக பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட “அறநெறி காவல்துறை பிரிவை” கலைக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை…
The post ஈரானில் மற்றுமொருவருக்கு விதிக்கப்பட்டது தூக்கு தண்டனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈரானில் மற்றுமொருவருக்கு விதிக்கப்பட்டது தூக்கு தண்டனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
