கொழும்பில் 4 இடங்களில் பொலிஸார் அதிரடி வேட்டை – ஒரே நாளில் 25 பேர் கைது
34 view
கொழும்பு மாவட்டத்தில் மருதானை, தெமட்டகொடை, மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களில் மாளிகாவத்தை பொலிஸார் ஒரே நாளில் நடத்திய விசேட சுற்றிவளைப்பில் 25 சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றுக் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 10 பேர் பிடியாணை நிலுவையில் உள்ளவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில், 8 சந்தேகநபர்கள் ஐஸ் போதைப்பொருளுடனும், இருவர் ஹெரோயினுடனும், இருவர் கஞ்சாவுடனும், மேலும் ஒருவர் 2.072 கிலோ கஞ்சாவுடனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 23 முதல் 54 வயதுக்குட்பட்ட மாளிகாவத்தை, மருதானை மற்றும் மட்டக்குளிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
The post கொழும்பில் 4 இடங்களில் பொலிஸார் அதிரடி வேட்டை – ஒரே நாளில் 25 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் 4 இடங்களில் பொலிஸார் அதிரடி வேட்டை – ஒரே நாளில் 25 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
