நாம் கட்சிகளாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிட மாட்டோம் – புளொட் அறிவிப்பு
25 view
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று. இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதன்போது, உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதிக ஆசனத்தை பெறுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தனித்து போட்டியிடுவது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் விடயங்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்திருந்தார். முன்னதாக, கட்சியின் மத்தியகுழுவில் கருத்து தெரிவித்திருந்த எம்.ஏ.சுமந்திரன், உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது பற்றி பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் பேசியதாகவும், அவர்கள் சாதகமான நிலைப்பாட்டில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில், கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் அமைப்பின் யாழ்…
The post நாம் கட்சிகளாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிட மாட்டோம் – புளொட் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாம் கட்சிகளாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிட மாட்டோம் – புளொட் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
