பொலிஸார் மீதும் சட்டம் பாயும்- முக்கிய அதிகாரி எச்சரிக்கை!
6 view
பொலிஸ் நிலைய பொலிஸ்துறை சார்ந்தோர் குற்றஞ்செய்தாலும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் எவ்வித தயவுகளுமின்றி அவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.றம்சீன் பக்கீர் தெரிவித்தார். கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களின் கலந்துரையாடல் கூட்டம் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.றம்சீன் பக்கீர் தலைமையில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றது. கல்முனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் இக்கூட்டத்தை நெறிப்படுத்தியிருந்தார். இங்கு கல்முனை பொலிஸ் நிலையத்தின் சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்குப் பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.றம்ஸீன் பக்கீர், நாட்டில் வறுமை மற்றும் அது போன்ற எந்த துன்பம் வந்தாலும் குற்றச்செயல்களை செய்ய அனுமதிக்க முடியாது. நாட்டின் சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக…
The post பொலிஸார் மீதும் சட்டம் பாயும்- முக்கிய அதிகாரி எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸார் மீதும் சட்டம் பாயும்- முக்கிய அதிகாரி எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
