யாழில் பரபரப்பு: வாள்களுடன் சிக்கிய முக்கிய கட்சியின் உறுப்பினர்!
6 view
வலி. மேற்கு பிரதேச சபையின், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இன்றையதினம் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கரத்தை துணவி பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீட்கப்பட்ட ஆயுதங்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில், பாரப்படுத்தப்பட்டார். சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post யாழில் பரபரப்பு: வாள்களுடன் சிக்கிய முக்கிய கட்சியின் உறுப்பினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பரபரப்பு: வாள்களுடன் சிக்கிய முக்கிய கட்சியின் உறுப்பினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
