மருதமுனையில் நிறுவை அளவை உபகரணங்களுக்கு முத்திரை!
6 view
அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால் பல்வேறு தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை ,மருதமுனை, நற்பிட்டிமுனை, பெரியநீலவணை ,ஆகிய பிரதேச வியாபாரிகளின் நிறுவை/அளவை உபகரணங்களை 2022/2023 ஆம் ஆண்டுக்கு சரிபார்த்து முத்திரை பதிப்பதற்கென இன்று(12) மருதமுனை கலாச்சார மண்டபத்தில் இடம்பெறுகின்றது. மேலும் செவ்வாய்க்கிழமை(13) புதன்கிழமை(14) ஆகிய திகதிகளில் காலை 9.30-3.30மணி வரை மருதமுனை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே குறித்த வியாபாரிகள் தங்களுடைய வியாபார அளவை நிறுவை உபகரணங்களை கொண்டு சென்று முதிரையிட்டுக்.கொள்ளுமாறு கல்முனை பிரதேச செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார். இதன் போது இலத்திரனியல் தராசுகள் பாரம்பரிய தராசுகள் நிறுக்கும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அளவீட்டுடன் கூடிய தராசுகள் சரி பார்க்கப்பட்டு சீல் செய்யப்பட்டு தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தராசுகளின் வகைகளுக்கேற்ப தராசுகள் இனங்காணப்பட்டு இச்செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதுடன் வர்த்தகர்கள் மீனவர்கள் உள்ளிட்டோர்…
The post மருதமுனையில் நிறுவை அளவை உபகரணங்களுக்கு முத்திரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மருதமுனையில் நிறுவை அளவை உபகரணங்களுக்கு முத்திரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
