நான் உயிருடன் இருக்கும் வரைக்கும் ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க முடியாது! சஜித் சபதம்
6 view
“நான் உயிருடன் இருக்கும் வரை, ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். “உள்ளூராட்சி சபைத் தேர்தல் விரைவில் வருகின்றது. நாட்டை மீட்கக்கூடிய ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கி, எமது வெற்றி பயணத்தை மக்கள் ஆரம்பித்து வைக்க வேண்டும்” – என்றும் அவர் அறைகூவல் விடுத்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் மாநாடு கொழும்பு, பொரளை கெம்பல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு அறைகூவல் விடுத்தார். அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிக்கொள்வதற்கான போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாஸ மேலும் கூறியதாவது:- “ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தை ஒடுக்குவதற்கு மாளிகை மட்ட சூழ்ச்சி நடக்கின்றது. திட்டமிட்ட அடிப்படையில் சேறுபூசப்படுகின்றது. எது எப்படி இருந்தாலும் சஜித் பிரேமதாஸ உயிருடன் இருக்கும் வரை, ஐக்கிய மக்கள்…
The post நான் உயிருடன் இருக்கும் வரைக்கும் ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க முடியாது! சஜித் சபதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நான் உயிருடன் இருக்கும் வரைக்கும் ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க முடியாது! சஜித் சபதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
