ஜனாதிபதியின் பலத்துடன் தலை தூக்க முயலும் கும்பல்-சஜித் தெரிவிப்பு!
25 view
நாட்டை அழித்து, வங்குரோத்தடையச் செய்து, கடும் நிதி மோசடி செய்த ராஜபக்ச குடும்பம் தற்போதைய ஜனாதிபதியின் பலத்துடன் மீண்டும் இந்நாட்டில் எழ முயல்வதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ‘இந்த ஜனாதிபதி நியமிக்கப்பட்டது நாட்டை கட்டியெழுப்புவதற்காக அல்ல. நாட்டை அழித்த ராஜபக்சர்களை பாதுகாக்கவே நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த மக்கள் ஒடுக்குமுறை யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள் சார் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் .’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
The post ஜனாதிபதியின் பலத்துடன் தலை தூக்க முயலும் கும்பல்-சஜித் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதியின் பலத்துடன் தலை தூக்க முயலும் கும்பல்-சஜித் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
