மன்னார் வீதிகளில் திடீரென ஓடித்திரிந்த மோப்ப நாய்களால் பரபரப்பு!
16 view
மன்னார் மாவட்டத்தில்,வைத்தியசாலைகள்,பாடசாலைகள் உள்ளடங்களான பல இடங்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட போதைப்பொருள் பரிசோதனைகளில் மன்னார் பொலிஸார் இன்று அதிகாலை முதல் முன்னெடுத்து வருகின்றனர். வடமாகாண ரீதியாக போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெதிலக தலைமையில் இன்று(08) வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் வீதிகள், பாடசாலைகள்,பொது இடங்களில் குறித்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது குறிப்பாக பாடசாலை சூழலில் போதைப்பொருள் பாவனை அறிகுறிகள் காணப்படுகின்றதா என்பது தொடர்பிலும் மோப்ப நாய்களின் உதவியுடன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது குறித்த பரிசோதனை தொடர்ச்சியாக அனைத்து பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post மன்னார் வீதிகளில் திடீரென ஓடித்திரிந்த மோப்ப நாய்களால் பரபரப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் வீதிகளில் திடீரென ஓடித்திரிந்த மோப்ப நாய்களால் பரபரப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
