இலங்கையில் இன்னும் சில வருடங்களின் இளைய சமுதாயம் இருக்காது! அமைச்சரின் அதிர்ச்சித் தகவல்
11 view
போதைப் பொருள் பரவல் காரணமாக அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் நாட்டில் இளம் சமுதாயம் என்ற ஒன்று மீதமிருக்காது எனவும் நாட்டை அழிக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் உள்ள பிரபல பாடசாலைக்குள் ஐஸ் என்ற போதைப் பொருள் பரவியுள்ளது. பெண்கள் பாடசாலைகளுக்குள் இந்த போதைப் பொருள் சென்றுள்ளது. பாடசாலைகளின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படும் என்று கடந்த காலங்களில் அவற்றின் பெயர்களை வெளியிடுவதில்லை. ஆனால் தற்போது அச்சப்பட தேவையில்லை பிரபல பாடசாலை முதல் மேல் கீழ் வரை அனைத்து பாடசாலைகளின் பெயர்களையும் வெளியிட முடியும் அந்த அளவுக்கு ஐஸ் போதைப் பொருள் பாடசாலைகளுக்குள் பரவியுள்ளது. பெண் மாணவிகளும் ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்துகின்றனர். ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் ஆயுள் காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே என்பது மருத்துவர்களின் ஆராய்ச்சி…
The post இலங்கையில் இன்னும் சில வருடங்களின் இளைய சமுதாயம் இருக்காது! அமைச்சரின் அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் இன்னும் சில வருடங்களின் இளைய சமுதாயம் இருக்காது! அமைச்சரின் அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
