பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண வேண்டுமாயின் தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும் – சித்தார்த்தன்
23 view
பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த வகையில் தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் (வியாழக்கிழமை) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்ளைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாடு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாடு பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்ட பின்னணியில் நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்ட போது, பொருளாதார நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு எட்டப்பட்டு, வரிசை யுகம் கட்டம் கட்டமாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிரதமர் உட்பட…
The post பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண வேண்டுமாயின் தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும் – சித்தார்த்தன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண வேண்டுமாயின் தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும் – சித்தார்த்தன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
