நடு வீதியில் காரில் வித்தை காட்டிய நபருக்கு நேர்ந்த கதி
7 view
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று (08) மிரிஹான பொலிஸாரிடம் வந்து சரணடைந்ததை அடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து விதிகளை மீறி சாலையில் காரை ஓட்டிச் சென்ற இவர், பின்னர் காவல்துறை அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறி கார் ஒன்று பயணித்ததால் சம்பந்தப்பட்ட காரை தெல்கண்டா சந்திப்பில் நிறுத்துவதற்கு இரண்டு பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது குறித்த நபர் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து பொலிஸாரை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த நிலையிலேயே குறித்த நபர் இன்று சரணடைந்துள்ளார்.
The post நடு வீதியில் காரில் வித்தை காட்டிய நபருக்கு நேர்ந்த கதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நடு வீதியில் காரில் வித்தை காட்டிய நபருக்கு நேர்ந்த கதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
