ஈரானில் சமீபத்திய அமைதியின்மையால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போராட்டக்காரருக்கு முதல் தூக்கு தண்டனை!
6 view
சமீபத்தில் நடந்த அரசாங்கத்துக்கு எதிரான அமைதியின்மையால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போராட்டக்காரருக்கு முதல் தூக்கு தண்டனையை ஈரான் அறிவித்துள்ளது. ‘கடவுளுக்கு எதிரான பகை’ எனப்படும் குற்றத்திற்காக புரட்சிகர நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட மொஹ்சென் ஷெகாரி என்பவர் இன்று (வியாழக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டார் என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செப்டம்பர் 25ஆம் திகதி தலைநகர் தெஹ்ரானில் ஒரு முக்கிய வீதியை மறித்து துணை இராணுவ பாசிஜ் படையின் உறுப்பினரை கத்தியால் காயப்படுத்தியதற்காக அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. எந்தவிதமான நடைமுறையும் இல்லாமல் விசாரணைக்கு பிறகு அவர் குற்றவாளி அறிவிக்கப்பட்டதாக, ஒரு செயற்பாட்டாளர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். நோர்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் இயக்குனரான மஹ்மூத் அமிரி-மொகத்தம், ஈரானிய அதிகாரிகள் சர்வதேச அளவில் விரைவான நடைமுறை விளைவுகளை எதிர்கொள்ளும் வரை, எதிர்ப்பாளர்களின் மரணதண்டனை தினமும் நடைபெறத் தொடங்கும் என்று டுவீட் செய்துள்ளார். ஈரானின் நீதித்துறை இதுவரை 11 பேருக்கு மரண தண்டனை…
The post ஈரானில் சமீபத்திய அமைதியின்மையால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போராட்டக்காரருக்கு முதல் தூக்கு தண்டனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈரானில் சமீபத்திய அமைதியின்மையால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போராட்டக்காரருக்கு முதல் தூக்கு தண்டனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
