கொழும்பில் போராட்டம் – குவிக்கப்பட்டுள்ள படைகள்
19 view
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீலங்கா டெலிகொம் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம்மின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்று வருகிறது.பொதுச் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ரீலங்கா இன்சுயூரன்ஸ் ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நாடளுமன்றில் இன்று வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில்,நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியன இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.
The post கொழும்பில் போராட்டம் – குவிக்கப்பட்டுள்ள படைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் போராட்டம் – குவிக்கப்பட்டுள்ள படைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
