அலங்காரப் பொருட்களின் விலைகள் மும்மடங்காக அதிகரிப்பு !

6 view
கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்களின் விலைகள் மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக புறக்கோட்டையில் உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அலங்கார பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இரண்டு அடி உயர செயற்கை கிறிஸ்மஸ் மரங்களின் விலை  ரூ.200இல் இருந்து ரூ.2000 ஆகவும், 4 அடி கிறிஸ்மஸ் மரம் ரூ.800இல் இருந்து ரூ.5500 ஆகவும், 7 அடி கிறிஸ்மஸ் மரத்தின் விலை ரூ.6000இல் இருந்து ரூ.23000 ஆகவும் அதிகரித்துள்ளன. சாதாரண மின்விளக்குகள் 250 முதல் 600 ரூபாவுக்கும், அலங்கார மின்விளக்குகள் மேலும் விலை அதிகம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய மலைநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் இயற்கை கிறிஸ்மஸ் மரத்தின் விலை இரண்டாயிரத்தை தாண்டும் என வர்த்தகர்கள் கூறுகின்றனர். தற்போதைய எரிபொருள் விலையைக் கருத்தில் கொண்டு இம்முறை குறைந்த விலையில் அவற்றை வழங்குவது சாத்தியமற்றது எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
The post அலங்காரப் பொருட்களின் விலைகள் மும்மடங்காக அதிகரிப்பு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース