யாழில் கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்களின் விலை மும்மடங்காக உயர்வு!
20 view
நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிவரும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பன்மடங்காக அதிகரித்து வருகின்றன. இவ்வாறானதொரு நிலையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் மக்கள் அவற்றினை கொள்வனவு செய்வதில் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கிறீஸ்தவர்கள்கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்களின் விலைகள் யாழ்ப்பாணத்தில் சென்ற ஆண்டு கொள்வனவு செய்த விலையினை விட மும்மடங்கு அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்யவேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக யாழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பொருட்களின் விலை உயர்வுகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post யாழில் கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்களின் விலை மும்மடங்காக உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்களின் விலை மும்மடங்காக உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
