முல்லைத்தீவில் 3 மாணவர்கள் செய்த செயல் – குவியும் பாராட்டுக்கள்
6 view
முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட , கோட்டை கட்டிய குளம் பாடசாலையிலிருந்து முதல் தடவையாக மூன்று மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அற்ற மிகவும் பின்தங்கிய எல்லைப்புற கிராமமாக காணப்படுகின்ற குறித்த பாடசாலையில் இருந்து முற்று முழுதாக பாடசாலை கல்வியை மட்டுமே பெற்ற மூன்று மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை சமூகத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் குறிப்பாக குறித்த மாணவர்களின் நெறிப்படுத்திய ஆசிரியர் வே. திவாகரன் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் தங்கள் நன்றியினை தெரிவித்துள்ளது. கோட்டை கட்டிய குளம் பாடசாலையில் கடந்த 2016இல் உயர் தரம் ஆரம்பிக்கப்பட்டது.தற்போது முதன் முறையாக,கு.சுஜாந்,சி.சிறிமேனகன்,ஆகியோர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்துக்கும், ஜெ.யசிந்தன் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விஞ்ஞானம் முகாமைத்துவப் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
The post முல்லைத்தீவில் 3 மாணவர்கள் செய்த செயல் – குவியும் பாராட்டுக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவில் 3 மாணவர்கள் செய்த செயல் – குவியும் பாராட்டுக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
