எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது: அமைச்சர் மஹிந்த அமரவீர
13 view
எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 12ஆவது நாளான நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். பெரும்போகத்திற்குத் தேவையான உர விநியோகம் இடம்பெற்றுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சோள உற்பத்தியாளர்களுக்கு உரம் மற்றும் விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சேதனப் பசளை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு ஹெக்டெயரை விட குறைந்த நிலங்களுக்கான உர விநியோகம் இலவசம் எனவும் அறுவடைக் காலப்பகுதியில் எரிபொருள் இலவசமாக வழங்கப்படவிருப்பதாகவும் தெரிவித்தார்.
The post எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது: அமைச்சர் மஹிந்த அமரவீர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது: அமைச்சர் மஹிந்த அமரவீர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
