அதிகாலையில் விழித்துக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – அவரசக் கூட்டம் இன்று
23 view
2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று காலை கூடியுள்ளது. இன்று காலை கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து பங்காளிக் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் இறுதி முடிவு எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த மாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை. இதன்போது வரவு செலவுத்திட்டத்தின் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில், தமது நிலைப்பாடு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று காலை முடிவெடுத்துள்ளனர்.
The post அதிகாலையில் விழித்துக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – அவரசக் கூட்டம் இன்று appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிகாலையில் விழித்துக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – அவரசக் கூட்டம் இன்று appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
