இலங்கையில் 62 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக யுனிசெப் தகவல்!

6 view
இலங்கையில் 62 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக, யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களில் 2.9 மில்லியன் குழந்தைகளும் அடங்குவதாக, குழந்தைகளுக்கான மனிதாபிமான நடவடிக்கை தொடர்பான யுனிசெப் நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருவதால், பாதுகாப்பான வருமானம் இல்லாத குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளையேனும் பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்பதாகவும் 5.3 மில்லியன் மக்கள் ஏற்கனவே உணவைத் தவிர்த்து வருவதாகவும், எதிர்வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் எனவும் யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, பொருளாதார சவால்கள், உணவு பணவீக்கத்தினால் கிராமங்களிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை கணிசமாகக் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இலங்கையில் 62 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக யுனிசெப் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース