வடக்கில் சூறாவளி எச்சரிக்கை -வெளியான அவரச அறிவிப்பு

6 view
மன்னாரில் இருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் வரையான கடல் பரப்புகளில் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. கிழக்கு கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சுறாவழியாக  வலுவடைவதால்  இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடல்  பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு  80 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும்.  தற்போது வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களை உடனடியாக திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை வடமாகாணம்  மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் இன்று 100 மில்லி   மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். அத்துடன்  வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு  கூறியுள்ளது.
The post வடக்கில் சூறாவளி எச்சரிக்கை -வெளியான அவரச அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース