கொழும்பில் இன்று கடும் பாதுகாப்பு – போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
17 view
சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில் எந்தவொரு தரப்பும் போராட்டங்களை இன்றைய தினம் மேற்கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் அந்த தருணத்திலேயே உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ.ஜீ.ஜே சந்திரகுமார தெரிவித்துள்ளார். எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதாக எந்தவொரு தரப்பேனும் அறிவித்தல் விடுத்த மாத்திரத்தில் பொலிஸ் திணைக்களம் பதற்றமடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு கூடுதல் நேரம் செல்லாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை புலனாய்வுப் பிரிவு தகவல்களின் அடிப்படையில் இந்த போராட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்ப்பு போராட்டங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பொலிஸாருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
The post கொழும்பில் இன்று கடும் பாதுகாப்பு – போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் இன்று கடும் பாதுகாப்பு – போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
