நடுவீதியில் குடை சாய்ந்த மரம் – மலையக போக்குவரத்தில் தடை!!
13 view
பசறை பண்டாரவளை வீதியில் நமுனுகுலை 12 ம் கட்டைப் பகுதியில் பாரிய காற்றின் காரணமாக வீதியோரங்களில் உள்ள மரங்கள் முறிந்து வீதியில் குடை சாய்ந்துள்ளன. இதனால் அப்பதையுடனான போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. மேலும் பசறை பண்டாரவளை அம்பலம் பகுதியில் உள்ள பாரிய மரம் ஒன்றும் வீதியில் குறுக்கே வீழ்ந்துள்ளதால் அப்பகுதியிலும் வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு வீதியில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளை போலீசார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
The post நடுவீதியில் குடை சாய்ந்த மரம் – மலையக போக்குவரத்தில் தடை!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நடுவீதியில் குடை சாய்ந்த மரம் – மலையக போக்குவரத்தில் தடை!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
