17 வருட பிரிவு; வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி கொலை ; கணவன் தற்கொலை!

13 view
கொக்கரெல்ல வேகம் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொன்றதுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேகம மற்றும் திவுலங்கடவல பகுதியைச் சேர்ந்த 49 மற்றும் 46 வயதுடையவர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். சுமார் 17 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் குறித்த பெண் வெளிநாட்டில் இருந்து டிசம்பர் 4 ஆம் திகதி வேகம கொகரெல்லவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி கணவர் வீட்டுக்குச் சென்று கூரிய ஆயுதங்களால் கொலைசெய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும், சந்தேக நபரும் அதே வீட்டின் அருகே கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் விஷம் குடித்து இறந்து கிடந்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Previous articleபொருளாதார நெருக்கடியால் இளம் தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை !
The post 17 வருட பிரிவு; வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி கொலை ; கணவன் தற்கொலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース