மட்டக்களப்பில் வளர்ப்பு நாயைத் தாக்கிய மகனைத் தந்தை திட்டியதால் மகன் எடுத்த விபரீத முடிவு !
14 view
மட்டக்களப்பில் வளர்ப்பு நாயை தாக்கியதற்காக தந்தை திட்டியதால் மனமுடைந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காத்தான்குடி, கல்லடி – நொச்சிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் அகிலன் துஷ்யந்தன் (வயது-18) என்பவரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில், குறித்த மாணவன் தனது வீட்டில் வளர்த்து வந்த நாயை அடித்து உதைத்துள்ளதாகவும், இதனால் தந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக மாணவி மீட்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
The post மட்டக்களப்பில் வளர்ப்பு நாயைத் தாக்கிய மகனைத் தந்தை திட்டியதால் மகன் எடுத்த விபரீத முடிவு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் வளர்ப்பு நாயைத் தாக்கிய மகனைத் தந்தை திட்டியதால் மகன் எடுத்த விபரீத முடிவு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
