யாழில் நடு வீட்டுக்குள் சிக்கிய மாட்டு இறைச்சி
7 view
இன்றையதினம், ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – நெடுங்காடு பகுதியில் இறைச்சிக்காக மாட்டினை வெட்டிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் காரைநகர் பொலிஸ் காவல் அரண் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சுற்றிவளைப்பின்போது இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் வீட்டின் உரிமையாளர் மாட்டு இறைச்சியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்பட்டு தங்குவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post யாழில் நடு வீட்டுக்குள் சிக்கிய மாட்டு இறைச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் நடு வீட்டுக்குள் சிக்கிய மாட்டு இறைச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
