மீன்பிடி அமைச்சருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அதிகாரம்
15 view
மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கான முழு அதிகாரத்தையும் ஜனாதிபதி எனக்கு வழங்கியுள்ளார். அத்துடன் கடற்றொழில் அமைச்சரென்ற வகையில் மீனவர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான முழு அதிகாரத்தையும், ஜனாதிபதி தமக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை- – இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இருதரப்பு இராஜதந்திர பேச்சு வார்த்தைகளை நாம் கைவிடவில்லையென்றும் சபையில் தெரிவித்த அமைச்சர், அந்த நடவடிக்கைகள் தொடர்வதாகவும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது ஜேவிபி எம்பி விஜித ஹேரத் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில், அத்துமீறி நாட்டுக்குள் பிரவேசிக்கும் இந்திய மீன்பிடி படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுமென்று மன்னாரில் வைத்து தெரிவித்தார். அது, இப்போது செயற்படுத்தப்படுமா? என்று ஜே.வி.பி எம்.பி. விஜித ஹேரத் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே…
The post மீன்பிடி அமைச்சருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அதிகாரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீன்பிடி அமைச்சருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அதிகாரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
