யானை தாக்கி நபரொருவர் உயிரிழப்பு – சடலம் அடையாளம் காணப்படவில்லை
6 view
மட்டக்களப்பு பொலநறுவை கொழும்பு பிரதான வீதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். 50 வயது மதிக்கத்தக்க நிலையில் உள்ளவறே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். நேற்று இரவு தேக்கங்காட்டு சந்தியின் 120 ஆவது மைல்கலில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.யானை தாக்கி உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவது குறித்து பிரதேச கால் நடை வளர்ப்போர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு பொலிசாருடன் வருகை தந்த திடிர் மரண விசாரணை அதிகாரி வ.ரமேஸ்காந் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். இதன்போது சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரேத அறை குளிரூட்டியில், 21 நாட்கள் வைக்குமாறு மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டார். சடலத்தை அடையாளம் காண்பதற்கு வாழைச்சேனை பொலிசார் பொதுமக்களின் உதவியினை நாடியுள்ளனர்.
The post யானை தாக்கி நபரொருவர் உயிரிழப்பு – சடலம் அடையாளம் காணப்படவில்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யானை தாக்கி நபரொருவர் உயிரிழப்பு – சடலம் அடையாளம் காணப்படவில்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
