தமிழ், முஸ்லிம் தலைமைகளின் பேச்சுக்கள் மூடு மந்திரமாக இருக்கக் கூடாது- நசீர் அஹமட் வலியுறுத்து!
13 view
சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு முஸ்லிம் கட்சிகளையும் அழைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, அந்தப் பேச்சுக்களை மூடிய அறைக்குள் நடத்தாமல் பகிரங்கத்தளத்தில் பேச வேண்டுமென, சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு முஸ்லிம் கட்சிகள் மற்றும் மலையக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ள அவர் அது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளதாவது. நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது வரவேற்கத்தக்கது. இப்பிரச்சினையால்,வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும், தமிழ் பேசும் சமூகங்களே அதிகம் பாதிக்கப்பட்டன. எல்லோருக்கும் பொதுவான பிரச்சினை என்பதால்தான், திருமலைத் தீர்மானம், வட்டுக்கோட்டை தீர்மானங்களில் அப்போதைய தமிழ் தலைமைகள் முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் அங்கீகரித்துச் செயற்பட்டன. முஸ்லிம்களுக்கான தனியான அடையாளத்தை தந்தை செல்வாகூட ஏற்றிருந்தார். இதனால்தான்,எமது தலைவர் அஷ்ரஃப்கூட சிறுபான்மை அரசியலுடன் இணங்கிப் பயணித்தார். காலப்போக்கில்,இந்த ஒற்றுமைகள் இல்லாமலாகி இரு சமூகங்களும் துருவங்களாகின. இப்போதுள்ள நிலையில், இச்சமூகங்களை…
The post தமிழ், முஸ்லிம் தலைமைகளின் பேச்சுக்கள் மூடு மந்திரமாக இருக்கக் கூடாது- நசீர் அஹமட் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ், முஸ்லிம் தலைமைகளின் பேச்சுக்கள் மூடு மந்திரமாக இருக்கக் கூடாது- நசீர் அஹமட் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
