சிவபெருமான் யாருடைய ஆள்? – யாழில் படையினர் விசாரணை!
15 view
சிவபெருமானின்அடையாளமான சிவலிங்கத்தினை வைப்பதில் கூட இடர்பாடுகளுக்கு முகம் எடுக்க வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். இன்றைய தினம் நாவற்குழியில் 7 அடி சிவலிங்க பிரதிஷ்டையின் பின் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கடந்த மாத இறுதிப் பகுதியில் நாவற்குழி பகுதியில் சிவலிங்கத்தினை வைக்க நிரந்தரமான கட்டடம் ஒன்று அமைக்க வேண்டும் என சிவ பூமி அறக்கட்டளையினர் தீர்மானித்திருந்தோம். அதனடிப்படையில் அதற்குரிய பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது பாதுகாப்பு தரப்பினர் வந்து பலதடவை விசாரணை மேற்கொண்டார்கள். நாங்கள் கூறினோம் இது ஒரு கோவில் சைவ கோவில் இந்துகளின் தெய்வமாகிய சிவபெருமானின் அடையாளமாக சிவலிங்கம் தான் இங்கே வைக்கப் போகின்றோம் எனகூறினோம் அப்போது கேட்டார்கள் சிவபெருமான் என்றால் அவர் யாருடைய ஆள் என்று நாங்கள் கூறினோம். அவர்தான் எங்களுடைய பரம்பொருள் என்று கூறினோம். அதையும் இரண்டு பக்கங்களில் எழுதிச் சென்றார்கள்…
The post சிவபெருமான் யாருடைய ஆள்? – யாழில் படையினர் விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிவபெருமான் யாருடைய ஆள்? – யாழில் படையினர் விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
