இலங்கையுடனான பாதுகாப்பு தொடர்பான உறவுகளை மேம்படுத்துவதற்கு பாதுகாப்பு ஆலோசகர் உறுதி!
17 view
செனகல் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அப்துல்லாயா ட்ரேரோ, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நேற்று (டிசம்பர் 06) இந்த சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கேர்ணல் ட்ரேரோவுடன் சுமுகமான கலந்துரையாடல்களை மேற்கொண்டார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் செனகல் இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி வாய்ப்புகளை தொடர்வதற்கும் அதிகரிப்பதற்குமான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் இக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. மேலும், இச்சந்திப்பினை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
The post இலங்கையுடனான பாதுகாப்பு தொடர்பான உறவுகளை மேம்படுத்துவதற்கு பாதுகாப்பு ஆலோசகர் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையுடனான பாதுகாப்பு தொடர்பான உறவுகளை மேம்படுத்துவதற்கு பாதுகாப்பு ஆலோசகர் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
