சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பிள்ளைகளை சேர்க்கும் கட்டாயத்தில் இலங்கை பெற்றோர்!
8 view
இலங்கையில் அதிகமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களில் அனுமதிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், குறிப்பாக கிராமப்புற மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பு பிரச்சினைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. சிறுவர்கள் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கின்றனர், உணவுப் பாதுகாப்பின்மை, வறுமை மற்றும் தொழிலுக்கான இடம்பெயர்வு காரணமாக அதிகமான பெற்றோர்கள் அவர்களை சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களில் அனுமதிக்க முற்படுகின்றனர் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கை உள்ளது. இது 2023 ஆம் ஆண்டு முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் 2.9 மில்லியன் சிறுவர்கள் உட்பட 6.2 மில்லியன் மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரித்து வரும் பணவீக்கம், வருமான பாதுகாப்பின்மை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (உணவு, எரிபொருள், உரங்கள் மற்றும் மருந்துகள்) கிடைப்பது அரிதாக இருப்பதால்,…
The post சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பிள்ளைகளை சேர்க்கும் கட்டாயத்தில் இலங்கை பெற்றோர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பிள்ளைகளை சேர்க்கும் கட்டாயத்தில் இலங்கை பெற்றோர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
