கொழும்பில் மெட்றோ ரயில் திட்டம் – நடந்தது என்ன?
6 view
கொழும்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ஆரம்பிக்கப்படவிருந்த இலகு ரயில் திட்டம் (LRT) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டதால் ஜப்பானிய கூட்டுறவு வங்கி பல கோடி ரூபாவை இலங்கையிடமிருந்து நட்ட ஈடாக கோரியுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் ஒரு வழி இலகு ரயில் திட்டம் (கொழும்பில் இருந்து மாலபே வரை) நிறுத்தப்பட்டதன் காரணமாக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிடம் இருந்து 5169 மில்லியன் ரூபா (31 மில்லியன் அமெரிக்க டொலர்) இழப்பீடாக கோரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்திய ஜப்பானிய ஆலோசகர் நிறுவனத்தால் ஏற்பட்ட லாப இழப்பு இது தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய சிறப்பு தணிக்கை அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. இதில் 4.4 பில்லியன் ரூபா திட்டம் நிறுத்தப்பட்டதன் காரணமாக ஆலோசனை நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டத்திற்காக கோரப்பட்டுள்ளது. மேலும், ஆலோசனை நிறுவனம் நிலுவையில் உள்ள விலைப்பட்டியல் மதிப்பாக 604 மில்லியன் ரூபாவையும், திட்டத்தை நிறைவு செய்வதற்கான செலவுகளாக 167 மில்லியன்…
The post கொழும்பில் மெட்றோ ரயில் திட்டம் – நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் மெட்றோ ரயில் திட்டம் – நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
