ஆட்சி அதிகாரம் இல்லாமல் சேவை செய்து காட்டுங்கள்! – அரச தரப்பினருக்குச் சஜித் சவால்
14 view
“முடிந்தால் ஆட்சி அதிகாரம் இல்லாமல் மக்களுக்குச் சேவை செய்து காட்டுங்கள் என்று அரச தரப்பில் உள்ளவர்களுக்குச் சவால் விடுக்கின்றேன்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் 42 ஆவது கட்டமாக 46 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் நேற்று (06) தெரணியகல சிறி சமன் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “பிரபஞ்சம், மூச்சு போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது சஜித் பிரேமதாஸவுக்குப் பொருட்கள் பகிர்ந்தளிக்க மட்டுமே தெரியும் என்றும், அதற்கு மேல் எதுவும் தெரியாது என்றும் அரசில் உள்ள ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டுகின்றனர். எவ்வாறாயினும், இலங்கையின் 74 வருட அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி ஆற்றிய பாரம்பரிய வகிபாகத்துக்கு அப்பால் தற்போதைய எதிர்க்கட்சி வேறுபட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. கல்வி சார்ந்த அணுகலில் பாரபட்சம் நிலவக்கூடாது. எனவே,…
The post ஆட்சி அதிகாரம் இல்லாமல் சேவை செய்து காட்டுங்கள்! – அரச தரப்பினருக்குச் சஜித் சவால் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆட்சி அதிகாரம் இல்லாமல் சேவை செய்து காட்டுங்கள்! – அரச தரப்பினருக்குச் சஜித் சவால் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
